Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குநர் வீட்டில் சோதனை – 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

தீபாவளியையொட்டி தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 100 சவரன் தங்க நகைகள் சிக்கின.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் மீது லஞ்ச புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது அலுவலகத்தில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கணக்கில் வராத ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பெருமாளின் சொந்த வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Categories

Tech |