பண்டிகை காலம் என்பதால் விழா கொண்டாட்டங்களின் போதும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் பிரதமர் திரு. நரேந்திர மோதி துர்க்கா பூஜையை இன்று தொடங்கி வைத்தார். காணொளி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் பாஜக சார்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா பரவல் நம் பாரம்பரிய பண்டிகைகளின் மீதான நம்பிக்கையை குறைக்கவில்லை என்று தெரிவித்தார். பண்டிகை காலம் என்பதால் விழா கொண்டாட்டங்களின் போதும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேற்கு வங்க மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு பாஜக தீவிர பணியாற்றி வருவதாக கூறினார்.