ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் பொறுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். திட்டமின்றி செயலாற்றினால் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறுதியான அணுகுமுறை மூலம் வெற்றிக் கிடைக்கும்.
பணியிடச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று நீங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும். சிலசமயத்தில் உங்களின் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் அனுசரித்துப் போவதன் மூலம் உங்களின் இருவருக்குமிடையே மகிழ்ச்சி நிலவும். நிதி வளர்ச்சி இன்று சுமுகமாக இருக்காது. இன்று உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லபலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.