புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சாலைவரி தொடர்பாக அரசு முடிவு செய்யாததால் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் 2 காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.