கன்னியாகுமாரி மாவட்டத்தில் முட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறிய ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா மருத்துவரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூட்டம் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி ஆரம்ப சுகாதார வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பிரமிளா தனது உயர் அதிகாரிகள் ஆண் மருத்துவர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாகவும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.