Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

23-10-2020, ஐப்பசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 06.57 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 01.28 வரை பின்பு திருவோணம்.

சித்தயோகம் பின்இரவு 01.28 வரை பின்பு மரண யோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

துர்காஷ்டமி.

கால பைரவர் வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  23.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பெரியவர்களின் சந்திப்பால் நல்லது நடக்க பெரும். குழந்தைகளின் படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். வெளியூர் செல்வது நான் உத்தியோகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் வீட்டில் செலவு உண்டாகும். உடல்நிலை ஆரோக்கியம் சற்று குறையும். பெரியவர்களின் ஆலோசனை உத்தியோகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்.தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் தேவையற்ற பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் ஆக இருப்பீர்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருங்கள் அதுவே நல்லது. பண விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்க பெறுவீர்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். தொழிலில் சக ஊழியர்களிடம் நல்ல ஒற்றுமை பலப்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் நல்ல செய்தி நடைபெறும்.உத்யோகத்தில் மேல் இருப்பவர்களின் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத் தேவைக்கு ஏற்ப வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய கூட்டாளிகளின் அருமுகம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு பெறுவீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாக கூடும்.

துலாம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புகள் இருக்கும். வீட்டில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழில் முன்னேற்றம்  அடையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் வழியாக சிவ செய்தி வரும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு அகலும் ஒற்றுமை கூடும். வெளிமாநிலத்தவர் நட்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை சேர்ப்பீர்கள். சுபகாரியம் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் மன சங்கடம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அனுகூல பலன் கிடைக்கும்.சிந்தித்து செயல்படுங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மனம் மகிழும் நிகழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் வருகை மனநிம்மதியை தரும். உடல்நலம் சீராக இருக்கும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாக இருக்கும். புதிய ரீதியில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு கடின உழைப்பு மட்டுமே உத்தியோகத்தில் வெற்றி கொடுக்கும். வீட்டில் சாதகமான நிலை இருக்கும். விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் வருமானம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் ஆர்வம் கூடும்.

Categories

Tech |