புறா குஞ்சு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 5
எண்ணெய் – 2 தேக் கரண்டி
வற்றல் – 5
வெங்காயம் – 6 கடுகு – சிறிதளவு
மிளகாய் – 1
தேங்காய் பால் – 200 மில்லி லிட்டர்
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு
புறா குஞ்சு – 2 கருவேப்பிலை – ஒரு கைபிடி
செய்முறை:
முதலில் இறகு முளைக்காத இரண்டு புறா குஞ்சுகளை தேர்ந்தெடுத்து வாங்கி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில் 5 வற்றல், மல்லி 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 5 சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் 2 கரண்டி எண்ணெய், சிறிது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் 6 வெங்காயம், 1 மிளகாய் வெட்டி போட்டு, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
மேலும் நன்கு வதங்கியதும் 200 மில்லி லிட்டர் தேங்காய் பால் எடுத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், வெட்டி வைத்திருக்கும் புறா குஞ்சுக் கறியையும் போட்டு மூடி சிறிது நேரம் வேக வைத்து இறக்கவும். புறா குஞ்சு சீக்கிரத்தில் வெந்துவிடும். இப்போது புறா குஞ்சு குழம்பு ரெடி.