Categories
மாநில செய்திகள்

303 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு…!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. அவர் விரைந்து ஒப்புதல் அழித்துவிட்டால் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேர் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் விரைவில் ஆளுநர் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Categories

Tech |