தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் உலக அரங்கமே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டு வருகின்றது. மக்களை காப்பாற்றி பொருளாதார நடவடிக்கையை மீட்டெடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் தடுப்பூசி காலத்தின் கட்டாயமாகவும் இருந்து வருகின்றது. இந்த முயற்சியில் பல உலக நாடுகளின் ஆய்வாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.