தமிழக தொடக்க கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் பின்பற்றி வரும் நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆனால் பொதுவாக விஜயதசமி சரஸ்வதி பூஜை விழாக்களில் புதிதாக சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக சரஸ்வதி பூஜை வரை இருப்பதால் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வரும் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது தமிழகத்தில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருவதால், விஜயதசமி அன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.