பீகார் மாநில துணை முதல்வர் சுனில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர் வரை யாரையும் விட்டுவைக்காமல் பாரபட்சமாக தாக்கி வருகிறது. கோடிக்கணக்கான மக்களை தாக்கிய கொரோனாவைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கூட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தான் பீகார் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் பீகார் மாநில துணை முதல்வர் சுனில்குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொண்டர்களை கவலையும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு விரைவில் பிரச்சாரம் செய்வேன் என சுனில்குமார் மோடி ட்வீட் செய்துள்ளார்.