Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடம்பில் கொழுப்பை கரைக்கும்…மருத்துவ குணம் வாய்ந்தது…!!

மிளகை பற்றி நீங்கள் அறியாத மகத்தான மருத்துவ குணங்கள்:

தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகத்தில், மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

அதில் ஒரு மாத்திரை வீதம் காலை, மாலை என இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.

ஈளை, இருமல் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலைக் காய்ச்சாமல் அதில் சிறிது மிளகையும், மஞ்சள் தூளையும் கலந்து குடித்து வர 3 நாளில் குணமாகும்.

பத்து மிளகை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.

மிளகுத் தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சம அளவு சேர்த்து அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும். அதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர, புதிய தலை முடி வளரும்.

Categories

Tech |