நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் என்பதனை நன்றி வணக்கம் என மறைமுகமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அதனைக் கண்டித்து விஜய் -சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனி மகள் மற்றும் விராட் கோலி அவர்களின் மனைவி அவர்களைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்டு உள்ளார்கள். இதை வன்மையாக கண்டித்தும் மற்றும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என திருவாரூர் எஸ்.எப்.ஐ கூட்டமைப்பு மற்றும் திருவாரூர் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம் கலந்து கொண்டு திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும் எனவும், பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டம் மேலும் லோக்பால் சட்டத்தின் கீழ் அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.