சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலர் ஆக பணியாற்றிய போது ஜீவா பாலமுருகன் ஆகியோர் மூலம் கஞ்சா கிடைக்கும் இடத்தை அறிந்ததாக தெரிவித்தார்.
ஆந்திராவில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவர் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத்க்கு கஞ்சா சப்ளை செய்தது அம்பலமாகி இருக்கிறது. காவலர் அருண் பிரசாத் தங்கியிருந்த புரசைவாக்கம் விடுதியில் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரே கஞ்சா விற்பனை செய்தது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.