நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பின்னர் பொருளாதார நலன் கருதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்நிலையில் மின்னணு விசா, சுற்றுலா விசா தவிர பிற விசாக்கள் மூலம் இந்தியாவில் வெளிநாட்டினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுற்றுலா தவிர பிற காரணங்களுக்காக வெளிநாட்டினர் விமானம், கப்பல் வழியாக இந்தியா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.