Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு கொடுத்து பழக்கம்….. திமுகவுக்கு எடுத்து பழக்கம் …. அமைச்சர் கடம்பூர் ராஜீ …!!

தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கூடுதல் காட்சியை திரையிட அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் ரூ.1000 நிவாரணம், நியாயவிலை கடைகளில் பொருட்கள் இலவசம் உள்ளிட்டவற்றை முதல்வர் 7 மாதங்களுக்கு வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. திமுகவுக்கு எடுக்க தான் தெரியுமே தவிர கொடுத்து பழக்கம் இல்லை. நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது, அவர்களே முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம். இலவச தடுப்பூசி அறிவிப்பை பொறுத்துக் கொள்ளாமல் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |