Categories
தேசிய செய்திகள்

சொன்னபடி கேட்க்கும்….. மீன்களுக்கு கூட ஆபத்தில்லை….. வைரலானா சைவ முதலை…!!

சைவ முதலையாக மீன்களைக் கூட துன்புறுத்தாமல் வாழ்ந்துவரும் முதலையின் புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது

ஆச்சர்யமூட்டும் சைவ முதலை 

முதலை என்றாலே அது மனிதர்களை மற்ற உயிரினங்களை சாப்பிடும் மிருகம் என்று தான் பலரும் அறிந்துள்ளோம். ஆனால் கேரளாவில் ஒரு முதலை முழு சைவமாக வாழ்ந்து வருகிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரி கோயில் வளாகத்தில் இருக்கும் குகையில்தான் சைவ முதலை வாழ்ந்து வருகிறது.

கோவிலின் காவலாளி 

பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு கோவில் வளாகத்தில் உள்ள குகையில் வசிப்பதாக நம்பப்படும் இந்த சைவ முதலை தான் கோவிலை பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. இதானால் கோவிலின் காவலாளி என்றும் இதனை நான் கூற முடியும்.

எப்படி வந்தது..? 

70 வருடமாக கோவிலில் வசித்து வரும் முதலைக்கு பாபியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முதலை எப்படி கோவிலுக்கு வந்தது என்றும் யார் அதற்க்கு பாபியா என்ற பெயரை வைத்தார்கள் என்பதும் இதுவரை தெரியாத ஒன்றாகவே உள்ளது.

மீன்களுக்கு கூட ஆபத்தில்லை

குளத்தில் பக்தர்கள் நீராடும் போதும் பாபியாவால்  அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டது இல்லை. சொல்ல போனால் குளத்தில் இருக்கும் மீன்களை கூட அந்த சைவ முதலை ஒன்றும் செய்வதில்லை என்பதே உண்மை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவிலுக்குள் வந்த பாபியா 

இந்நிலையில் முதல்முறையாக பாபியா கோவில் வளாகத்திற்குள் சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி கூறுகையில் வளாகத்திற்குள் வந்த பாபியா சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு பின்னர் அர்ச்சகர் சந்திரபிரகாஷ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மீண்டும் குகைக்கு சென்று விட்டது.

பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி 

கோவில் உள்ளேய வந்த முதலையின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த சிலர் கோயிலின் கருவறைக்குள் முதலை சென்றதாக வதந்திகள் பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்று கோவில் அதிகாரி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |