Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்‍குறுதியில் இலவச கொரோனா தடுப்பூசியை அறிவித்த விவகாரம் …!!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநிலம் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் திரு. லாலு பிரசாத்யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளதுடன் காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் பிகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அம்மாநிலம்  மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் நோய் பற்றிய அச்சத்தை பாஜக அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் கொரோனா  தடுப்பூசி நாடு முழுமைக்கும் சொந்தமானது என்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டிய நிலையில் பாஜக அதனை தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பது ஏற்புடையது அல்ல என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சமூக ஆர்வலர் சகாத் கோகுலாய் புகார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |