பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கான துவக்க நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப் படுகிறதா என்று சந்தேகம் எழுவதாக மதுரை என்.பி.சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
வங்கி எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களில் உள்ள பாரபட்சம் தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவுர்சந்து கிளாட்டக்கும், சு. வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பொதுப்பிரிவினருக்கும், ஓபிசி, எஸ்சி பிரிவினருக்கும் ஒரே அளவு கட்-ஆஃப் மதிப்பெண் நிர்ணயித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயித்தது ஏன் என்பது அவரது கேள்வியாகும். இதனிடையே மத்திய அரசின் இந்த செயல் இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை என்று அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.