JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டவருகிறது. JEE தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
JEE முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள் ஆகியவை இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் JEE தேர்வுகள் இணை பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளனர்.