Categories
மாநில செய்திகள்

மருத்துவப்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்‍கீடு மசோதா​ விவகாரம் …!!

தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவில் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான நீட்தேர்வு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடருந்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து  வருகிறார்.

இதனிடையே தமிழகத்தில் ஏழை எளியா மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Categories

Tech |