Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்… சென்னையில் புறநகர் ரயில் சேவை ?… வெளியான புது தகவல் …..!!

புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான  போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொருளாதார ரீதியாக பல்வேறு விஷயங்களை மீட்டெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்பது அரசுக்கு இருக்கிறது.அந்த அடிப்படையில் புறநகர் ரயில் சேவை என்பது மிகவும் அத்தியாவசியமானது. பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் பல லட்சம் பேர் பயன்படுத்தி வரக் கூடிய நிலையில் அதனை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வைத்துள்ளார்.

Categories

Tech |