மலையாளம், தமிழ், தெலுங்கு என வலம் வரும் நடிகை அனுபமா அழகு பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியிறுகிறார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது தள்ளிப்போகாதே படத்தில் நடிகர்அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைக்கு வர தயாராக உள்ளன. இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்ப- தாவது;
நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. ஆகவே அவர்கள் மிகவும் வலிமையான மனதோடு இருக்க வேண்டியது அவசியமாகும். என்னிடம் சில பேர் படங்கள் தோல்விஅடைந்தாள் என் செய்வீர்கள் என்று என்னிடம் கேட்பவர்களிடம் நான் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பேன் என பதில் கூறி வந்தேன். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இன்றி இஷ்டத்துக்கு பேட்டி கொடுத்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களுக்கு ஆளானேன்.
நான் மிகவும் அகங்காரம் பிடித்தவள் என பேசினார்கள் இது எனக்கு வருத்தத்தை கொடுத்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அப்பொழுது தமிழ் ,தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தேன். என்னிடம் என் கண்களும் சிரிப்பும் தான் அழகு என்று எல்லோரும் சொல்வார்கள். எனக்கு மற்ற நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகளின் நடிப்பு பிடித்து இருந்தால் அவர்களுக்கு போன் செய்து பாராட்டுவேன். உதவி இயக்குனராக 3 படங்களில் பணியாற்றி இருக்கின்றேன். நான் எதிர்காலத்தில் டைரக்டர் ஆவேன். என அவர் கூறினார்.