திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் அறநிலையத் துறையினரின் ஒத்துழைப்போடு தனியாருக்கு விற்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சைவ சமயத்தையின் தலைமைப்பீடம் எனப் போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 1,000 ஏக்கருக்கும் மேல் நிலம் இருந்து வருகின்றது. இவற்றில் சிலவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலைகள் ஆலயத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் கவிதா ஆட்சியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை உயர்அதிகாரிகள் துணையோடு திருவாரூரை அடுத்த புளிவளம் பகுதியில் திருத்துறைபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம்.
மேலும் ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மற்றும் ஆலயத்திற்கு சொந்தமான குளம் ஒன்றையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் விற்பனை செய்து பல லட்சம் ஊழல் புரிந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஆலயத்திற்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.