பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தவறில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் திரு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் பிரச்சாரம் அங்கு சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க வேண்டிய நிலையில் பாஜக அதனை தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பது ஏற்புடையது அல்ல என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சமூக ஆர்வலர்கள் சகத் கோகுலே புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது . ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி தேர்தல் விதிமீறலாக கருதப்படமாட்டாது என்றும் கடந்த காலங்களிலும் இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.