Categories
தேசிய செய்திகள்

பிரிந்து வாழும் கணவருக்‍கு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி

பிரிந்து வாழும் கணவருக்கு பராமரிப்பு செலவுக்காக மாதம் 1000 ரூபாய் வழங்க அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு உத்தரப்பிரதேச குடும்பநல நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியை பிரிந்து வாழும் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மனைவியிடம் இருந்து தனக்கு பராமரிப்பு செலவு வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாதம் 12,000 ரூபாய் அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவி கணவரின் பராமரிப்புச் செலவுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |