Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இனி – வெளியான அதிர்ச்சி செய்தி..

ஏடிஎம்மில் ரூ. 5000-க்கு  மேல் பணம் எடுத்தால் ரூ .24 ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏடிஎம் கட்டண மறுபரிசீலனை குழு இந்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.

பொதுவாக, ஏடிஎம் மூலமாக, நமது வங்கிக் கணக்கிலிருந்து  பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வங்கியைப் பொறுத்து வெவ்வேறு குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் நீங்கள் பணம் எடுத்தால் இத்தனை முறை இலவசம் என்றும், அதற்கு மேல் பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால், இனி நீங்கள் 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இது உங்களது 5 இலவசப் பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படாது.

Categories

Tech |