நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு செல்லும்மாறு அறிவுறுத்தி உள்ளனர்.
தனக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் வீட்டிலுள்ள பீரோவில் கழற்றி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலை குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.