Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய மகன்….. மகள் வீட்டில் மன உளைச்சல்….. விரக்தியில் முதியவர் தற்கொலை…!!

மகன் மற்றும் மகள் கைவிட்டதால் 75 வயது முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்பர்ட் ராஜ். இவருக்கு யாபேஸ் என்கிற மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு வருடங்களுக்கு முன்பு அல்பர்ட் ராஜின் மகன் யாபேஸ்  தந்தைக்கு தெரியாமல் அவரது வீட்டை விற்று பணத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் போக  இடமில்லாமல் அல்பர்ட் ராஜ் தனது கடைசி மகள் கெர்சி வீட்டில் இருந்து வந்தார். மகள் வீட்டில் மன உளைச்சலுக்கு ஆளான அல்பர்ட் ராஜ் மகளின் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றார்.

சென்னையில் பல இடங்களில் சுற்றி வந்த அவர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மணிமங்கலம் அருகே அமைந்திருக்கும் அவுட்டர் ரிங் ரோடு அருகே உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

 

 

Categories

Tech |