கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசும் மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தற்போது நாளை முதல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்து அரசு செயலாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதித்து இருந்த நிலையில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று முதல் தனியார் பஸ்களை புதுச்சேரி அரசு இயக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.