தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் கனகாம்பரம், செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து உள்ளன. வரும் நாட்களில் மேலும் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.