Categories
ஆட்டோ மொபைல்

புதிய மேம்பட்ட விதத்தில் ஆல்டோ 800… விரைவில் இந்தியாவில்…!!

Image result for ஆல்டோ 800 கார்

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 மாடலிலும் A.P.S, EPT, டிரைவர் சைடு ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரைவர், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஆட்டோமோடிவ் தரத்தின் 145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.

Image result for ஆல்டோ 800 கார்

பாதுகாப்பு அப்டேட்கள் தவிர புதிய ஆல்டோ காரில் பம்ப்பர் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது. பிறகு இந்த காரில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை. இந்த காரின் மியூசிக் சிஸ்டத்தில் USP மற்றும் ஆக்ஸ் (AUX) வசதி உள்ளது. மேலும் 796 CC பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

Image result for ஆல்டோ 800 கார்

புதிய மாருதி ஆல்டோ காரின் விலை பற்றி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், இந்த காரின் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட இந்த ஆல்டோ கார் இந்தியாவில் டேட்சன் ரெடிகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |