மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் வசித்து வந்தார்.
இந்நிலையில் வயிற்று வலி காரணமாக குலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி அலங்காநல்லூர் காவல்துறையினர் இளைஞர் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை பரதன், தாய் லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.