Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது வரை செஞ்சிருப்பீங்க….. இனி இந்த 7 தப்ப செய்யாதீங்க ப்ளீஸ்….. மூளை மலுங்கிடும்….!!

உங்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக இருப்பது மூளைதான். மூளையை ஆரோக்கியமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் பராமரித்தால், உடல்நலம், மனநலம் இரண்டையும் காக்கலாம். இதற்கு தடையாக இருக்கும் மோசமான 7 பழக்கங்களை பட்டியலிடுகிறோம்  இவற்றை தவிர்த்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். 

காலை உணவை தவிர்த்தல் : காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைத்து மூளையை சோர்வடையச் செய்யும். சரியான நேரத்தில் தவறாமல் உணவு அருந்துவது மூளையை  ஆற்றலுடன் வைக்கும்.

குறைவான தூக்கம் : இரவு தூக்கம் குறைந்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதோடு மூளை செல்கள் விரைந்து அழியவும்  காரணமாகும். இது   உங்கள் மூளையின் நினைவாற்றலையும்,  சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். நாம் உறங்கும் போது தான் மூளை தன்னைப் பராமரித்து பழுதை நீக்கி  கொள்கிறது. உங்கள் செயல்திறன் அதிகரிக்க குறைந்தது 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். 

அதிக சர்க்கரை, அதிக உப்பு இரண்டும் ஆபத்து : உடல், மூளை இரண்டுக்கும் சர்க்கரை தேவை. ஆனால் அளவுக்கு அதிகமான சர்க்கரையும், உப்பும் மூளையை பாதிக்கும். உணவு மூலம் பெரும் அவசியமான சத்துக்களை உடல் கிரகிப்பதையும்  இது கடினமாக்குகிறது. மேலும் மூளையின் செயல் திறனையும் இது குறைக்கும். 

குறைவாக நீர் அருந்துவது : மூளையில் 80 சதவிகிதம் நீரால் ஆனது தான். வேகமாக சிந்திக்கவும், சிறப்பாக கவனித்துச் செயல்படவும் மூளைக்குப் போதுமான நீர் தேவைப்படுகிறது. ஆகவே எப்போதும் உடலின் நீர்ச்சத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். தாகம் எடுக்கும் போதெல்லாம் தவறாமல் நீர் அருந்துவது உடலையும், மூளையையும் சிறப்பாக செயல்பட வைக்கும். 

சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்தல் : சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும்  சிலர் அதைத் தள்ளிப் போடுவது உண்டு. இந்த பழக்கம் மூளை நரம்புகளை பாதிப்பதாக அண்மை  ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும் போது, சிறுநீர் பையில் தொற்றுக்கள்  மற்றும் சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.

புகைப்பிடித்தல் : புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு என்பது மட்டுமல்ல. அது மூளையை சுருங்கச் செய்யும். இதனால் நினைவாற்றல் குறையும். அல்சீமர் மற்றும் மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. மேலும் இதயநோய், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் காரணமாகிறது.

 முழுவதும் போர்த்திக் கொண்டு தூங்குதல் : தலை முதல் பாதம் வரை முழுவதும் போர்த்திக் கொண்டு உறங்குவது வெதுவெதுப்பாகவும், சுகமாகவும் இருக்கலாம். ஆனால் இது உடலின் ஆக்ஸிஜன் நுகர்வை குறைத்து   கார்பன் டை ஆக்சைடை  அதிகமாக சுவாசிக்க செய்கிறது. மூளை ஒழுங்காக செயல்பட ஆக்சிஜன் மிக அவசியம் என்பது நினைவிருக்கட்டும். 

Categories

Tech |