முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சிஎஸ்கே அணியை கலாய்த்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஐபிஎல் 2020 க்கான சீசன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலானோர் நட்சத்திர அணியாக சிஎஸ்கே அணி திகழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல், சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டரீஸ் வயது முதிர்ந்தவர்களை கொண்டு விளையாடும் போது சில நேரங்களில் சறுக்க நேரிடும் என்று கலாய்த்துள்ளார். ஏற்கனவே சோகத்தில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு இந்த கருத்து பெரும் இடியாக அமைந்துள்ளது.