Categories
தேசிய செய்திகள்

அம்மாவை அடித்த தந்தை…. போட்டு தள்ளிய மகள்…. போலீசில் அதிர வைக்கும் வாக்குமூலம் …!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்ததைப் பார்த்து துணி துவைக்கும் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமி நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.

மகளின் திருமணம் பற்றி கணவன் மனைவி இடையே பேச்சு தொடங்கிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குழந்தைகள் காப்பகத்திற்கு சிறுமியை அனுப்பி வைத்தனர்.

மூத்த மகளின் வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தபோதும் வேலைக்கு செல்லாத தந்தை அவர்களுக்கு பாரமாக இருந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |