கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது.
சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சங்கீதா தன்னைப்போன்ற திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டாதனால் கோவை மாவட்டத்தின் திருநங்கைகள் சங்கத் தலைவராக விளங்கிய சங்கீதா ஊரடங்கு காலத்தில் பல இடங்களில் தன்னால் முடிந்த அளவில் நிதி திரட்டி புதிதாக கிச்சன் இந்த உணவகத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில்தான் ராஜேஷ் என்ற இளைஞன் சங்கீதாவை தொடர்பு கொண்டு தான் ஐடிஐ படித்து முடித்துவிட்டு வேலை தேடுவதாகவும் தங்கள் உணவகத்தில் வேலை கிடைக்குமா என்றும் கேட்டுள்ளார். திருநங்கை சங்கீதா இளைஞர் ராஜேஷ் மீது பரிதாபப்பட்டு பிரியாணி மாஸ்டராக வேலையில் சேர்த்துக் கொண்டார். அதோடு தங்க இடமில்லாமல் இருந்த ராஜேஷுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜேஷ் சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். சங்கீதா கொலை செய்யப்பட்ட அன்றும் இதே போன்று ராஜேஷ் தொல்லை கொடுத்ததால் தான் போலீஸில் சொல்லி விடுவதாக சங்கீதா மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் திருநங்கை சங்கீதாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.