சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அதற்கான பணியை நான் செய்துக்கொண்டிருக்கின்றேன். நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. மக்கள் அழைக்கும்போது அரசியலுக்கு வருவார் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வீடு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.