Categories
சினிமா தமிழ் சினிமா

இத கொஞ்சம் வேற மாதிரி செய்யுங்க…. தல அஜித் கொடுத்த அட்வைஸ்… காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் அஜீத்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வலிமை படத்தின் தீம் மியூசிக் பற்றி அறிவுரை கூறியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக இருக்கும் படமானது வலிமை ஆகும். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது நடிகர் அஜித் நடிக்கும் 60 வது படம் ஆகும். அதிரடி சண்டை படமாக  தயாராகி வருகின்றது.  சமீபத்தில் பேட்டியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படம் பற்றி ருசிகர தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசை அமைக்கும் போதே அஜித் எனக்கு போன் செய்து  பில்லா, பில்லா-2, மங்காத்தா என்று நிறைய தீம் மியூசிக் கிட்டாரை கொண்டு  செய்து விட்டோம். ஆனால் வலிமை படத்தில் கிட்டார் இல்லாமல் தீம் மியூசிக் அமைக்க முயற்சி செய்யுங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.

அவர் கூறியதை  ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டாரை  பயன்படுத்தாமல் வலிமை படத்தில் தீம் மியூசிக்கை உருவாகினேன்.  மூன்று பாடல்கள் முடிந்துவிட்ட நிலையில் ஒரு சின்ன தீம் மியூசிக்கும் முடிந்துவிட்டதாகவும்  யுவன் சங்கர் ராஜா கூறினார்.

Categories

Tech |