கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்த ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்த இளைஞர் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். வேறு யாரேனும் கொலையில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.