Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்பவும் சிரிச்சிட்டே இருக்கீங்க…. அடுத்த சீசனிலும் ஆடுவேன்… தோனி அதிரடி பதில் …!!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி உங்கள் முகத்தில் தெரியலையே ? எப்போதும் சிரிச்சுகிட்டே.. சிரிச்ச முகத்தோட இருக்கீங்களே ? என்ற கேள்விக்கு எங்களை நம்பி இந்த டீம்ல எங்களை செலக்ட் பண்ண எங்களுடைய நிர்வாகம் எங்களை நம்புறாங்க.

இந்த வருஷம் இல்லன்னா என்ன அடுத்த வருஷம் நிச்சயமாக நாங்கள் சாதித்துக் காட்டுவோம். அடுத்து இருக்க கூடிய மூன்று போட்டியில் எதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து நாங்க நிச்சயம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தேடுவோம். இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடைய திறமை என்ன அப்படிங்கறதை தெரிஞ்சுக்கணும். இதனால அடுத்த வருடம் யார் யாரெல்லாம் நன்றாக விளையாடுவார்கள் என அடையாளம் கண்டு வைக்கிறதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்.

பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் பவுலர்களும் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி ஆடணும். நான் கேப்டன் கேப்டன் ஆச்சே எங்கேயும் ஓடமுடியாது. எல்லா ஆட்டத்திலும் நானும் விளையாடுவேன் என சொல்லி இருக்கிறார். இதில் நமக்கு ஒரு விஷயம் கிளியரா தெரிஞ்சிருக்கு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் தான் ரிட்டயர்மென்ட் தவிர ஐபிஎல் நிச்சயம் தொடர்வார் எம்எஸ் தோனி.

Categories

Tech |