2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகை மாவட்டம் கொண்டல் காலனி தெருவைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு வகுப்பறையில் இருக்கும்போது 3 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்தனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொரு சட்டப் பிரிவின் கீழ் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.