வறுத்த நண்டு செய்ய தேவையான பொருள்கள்:
நண்டு – 5
சிகப்பு மிளகாய் – 10
இஞ்சி – 1 அங்குலம்
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குலம்
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 கடுகு சிறிதளவு
கருவேப்பிலை – 1 கைபிடி
தக்காளி – 1
தண்ணீர் – தேவையானஅளவு
செய்முறை:
நண்டு 5 எடுத்து, அதன் ஓடுகளை நீக்கி சுத்தம் செய்து தனித்தனியாக பிரித்து கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயம், தக்காளியை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
மிக்சி ஜாரை எடுத்து அதில் மிளகாய், இஞ்சி, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, மல்லி (தனியா) ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
மேலும் அதனுடன், அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்க்கவும்.
நண்டு நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும். இப்போது சுவையான வறுத்த நண்டு ரெடி. அதில் எலுமிச்சை மற்றும் மல்லித் தழையை தூவி அலங்கரித்து கொள்ளலாம்.