Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு…!!

இந்தியாவில் ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணைக்கு ஆஜராக முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துவிட்டது. பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களின் விழிப்புணர்வூட்டும் பேச்சுகளையும் பேஸ்புக் தடை செய்வதில்லை என்றும், அதேநேரம் காங்கிரஸ் தலைவர்களின் வீடியோக்களையும், பதிவுகளையும் திட்டமிட்டு அந்நிறுவனம் தடை செய்வதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இந்தியா ஃபேஸ்புக் பிரதிநிதிகளிடம் விசாரிக்க வலியுறுத்தி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாபுசிக்கர் பெருக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் பயனாளிகளின் தகவல்களைத் விளம்பர நோக்கங்களுக்காக மற்றவர்களுக்கு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நிறுவனங்களுக்கு பாஜக எம்பி திருமதி மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி அந்த குழு முன்பு நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்து விட்டது. அமேசான் நிறுவனத்தின் இந்த செயல் உரிமை மீறலை காட்டுவதாகவும் அந்நிறுவன எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்போம் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |