Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான…ஆட்டு மூளை வறுவல்…இப்படி செஞ்சி அசத்துங்க…!!

மூளை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

மூளை                                          –  2
சின்ன வெங்காயம்               –  50 கிராம்
சீரகம்                                            – அரைத் தேக்கரண்டி
மிளகு தூள்                                 –  1 தேக்கரண்டி
மல்லி தூள்                                 –   2 தேக்கரண்டி
உப்பு                                              –  தேவையான அளவு
தண்ணீர்                                      –  1கப்
கருவேப்பிலை                          –   சிறிதளவு
கடுகு                                              –  சிறிதளவு

செய்முறை:`

ஆட்டின் மூளை 2 எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.  சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,  சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம் 50 கிராம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் அதனுடன் 1 கப் தண்ணீர், மிளகுத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு  உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதனை அடுத்து 2 மூளைத் துண்டுகளையும் அதனுடன் சேர்த்து  மிதமான தீயில் வேக நன்கு வதங்கிய பின் இறக்கினால் சுவையான மூளை வறுவல் தயார்.

Categories

Tech |