Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…? புகார் அளித்த பெற்றோர்… வாலிபர் போக்சோவில் கைது…!!!

பள்ளி மாணவியை கோவைக்கு கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தில் கைது செய்துள்ளனர் .

தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் மைனர் பெண்ணான 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார் . வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . பின்னர் அவரை  கும்பார அள்ளியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடத்தியது  தெரியவந்ததை அடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் .

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு கோவையில் மாணவி மற்றும் வாலிபர் இருவரும் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது . இதையடுத்து  அங்கு சென்ற காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் மற்றும் மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர் . காதல் விவகாரமா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா  என  போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர் .

Categories

Tech |