கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, மாணவர்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் கல்வி நிலைய திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆனாலும் மக்கள் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று அரசு அவ்வப்போது உள்ள பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு வெளியாகியுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து தான் கேள்வி கேட்கப்படும். அதில் கூறப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.