Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… இனி வட்டி கட்ட வேண்டாம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா கால பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலையை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத கடன்களுக்கு வட்டி வசூல் இல்லை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ரூபாய் 2 கோடி வரையிலான கடன் வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுள்ளது. வீட்டு கடன், கிரெடிட் கார்டு, சிறு தொழில், கல்வி, தனிநபர் கடனுக்கான வட்டி கூடுதல் வட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |