பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை பிரதமர் மோடி நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது.
இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனால் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்று உறுதியாகியுள்ளது.