Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈரல் மிளகு சாப்ஸ்…ஹோட்டல் சுவைக்கு…இதுதான் காரணமா…!!

ஈரல் மிளகு சாப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

ஈரல்                                                        – அரை கிலோ
பெரிய வெங்காயம்                       –  1
இஞ்சி                                                    –  2 அங்குலம்
பூண்டு                                                   –  8 பல்
மல்லித்தூள்                                        –  1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்                               –  4

செய்முறை:

ஆட்டின் ஈரல் அரை கிலோ எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 1 பெரிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் 2 அங்குலம் இஞ்சி துண்டு, 1 மேஜைக் கரண்டி மிளகு, 8 பல் பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைஎடுத்து  அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரை தேக்கரண்டி கடுகு, நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் ஈரல் துண்டுகளை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கி, பின்பு அரைத்து வைத்த மசாலா, தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக வேகவைத்த ஈரல் துண்டுகள் வெந்து மசாலா கெட்டியானதும் இறக்கவும். இப்போது சுவையான ஈரல் மிளகு சாப்ஸ் ரெடி.

Categories

Tech |